பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் திருவாசகம் (1 அகவற்படலம்) முதலாவது சிவபுராணம் (சிவனது அநாதி முறைமையான பழமை) (திருப்பெருந்துறை) (கலி வெண்பா) நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் லூழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க எகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிப்ோற்றி சீர்ஆர் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி (15) 96