பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிவபுராணம் ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான்; (20) கண்நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்துஎய்தி எண்ணுதற்கு எட்டா எழில்.ஆர் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்; (25) புல்ஆகிப் பூடுஆய் புழுஆய் மரம்ஆகிப் பல்விருகம்ஆகிப் பறவைஆய்ப் பாம்புஆகிக் கல்ஆய் மனிதர்ஆய்ப் பேய்ஆய்க் கணங்கள் ஆய் வல்அசுரர் ஆகி முனிவர்ஆய்த் தேவர்ஆய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்; மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என்உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) 98