பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிவபுராணம் வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய்ஆயினஎல்லாம் போய்அகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துஉலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணரியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே; (45) கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்தபிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஒர் ஐந்துஉடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தனனை (50) மறைந்திட முடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டிப் புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்குமூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய (55) 100