பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிவபுராணம் விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்புஆகிக் கசிந்து உள்உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயின் சிறந்த தயாஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன்.ஆர் அமுதே சிவபுரனே பாசம்ஆம்பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே ஆரா அமுதே அளவு இலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆர்உயிர்ஆய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையும்ஆய் அல்லையும்.ஆம் சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால்கொண்டு உணர்வார்தம் கருத்தின் 1 O2 (60) (65) (70) (75)