பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிவபுராணம் நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பு அரிய பேர் ஒளியே ஆற்று இன்பவெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர்ஒளிஆய் சொல்லாத நுண்உணர்வுஆய் (80) மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவுஆம் தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள் ஊற்று ஆன உண்ஆர் அமுதே உடையானே வேற்று விகார விடக் குடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனே ஒ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டு இங்குவந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டிநாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று சொல்லற்கு அரியானைச்சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 1 O4 (85) (90) (95)