பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது கீர்த்தித் திருஅகவல் (சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை) தில்லை தில்லை மூதுார் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி, எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி, மண்ணும், விண்ணும், வானோர் உலகும், துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும், என்னுடை இருளை ஏறத் துரந்தும், அடியார் உள்ளத்து அன்பு மீதுாரக் குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும், மன்னும் மாமலை மயேந்திரம்.அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்; கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி, நல்லாளேடு நயப்புறவு எய்தியும்; 1 1 O (10)