பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்; கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நல்தடம் படிந்தும்; கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்; மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்; மற்று, அவைதம்மை மயேந்திரத்து இருந்து உற்ற ஐம் முகங்களால் பணித் தருளியும்; (20) நந்தம் பாடியில் நான்மறையோன் ஆய், அந்தம்இல் ஆரியன்ஆய், அமர்ந் தருளியும்; வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும், நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி, ஏறுஉடை ஈசன், இப் புவனியை உய்யக் கூறுடை மங்கையம் தானும் வந்தருளி, குதிரையைக் கொண்டு, குடநாடுஅதன்மிசைச் சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்: வேலம் புத்துார் விட்டேறு அருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்; (30) தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்துர் வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்; 112