பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும்; அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணுன் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்; ஆண்டு கொண்டருள அழகு உறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனகம் இசையப் பெருஅது, ஆண்டான் அங்கு ஒர் அருள்வழி இருப்பத் துரண்டு சோதி தோற்றிய தொன்மையும்; அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி, இந்திரஞாலம் காட்டிய இயல்பும்; மதுரைப் பெருநல் மாநகர் இருந்து, குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்; ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்; உத்தர கோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்; பூவணம்.அதனில் பொலிந்து, இனிது அருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும்; வாதவூரினில் வந்து, இனிது அருளிப் பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்; திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகி, கருவார் சோதியில் கரந்த கள்ளமும்; 1 14 (40) (50)