பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் பூவலம்.அதனில் பொலிந்து, இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும்; தண்ணிர்ப் பந்தர் சயம் பெற வைத்து, நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்; விருந்தினன் ஆகி, வெண்காடு.அதனில், (60) குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும்; பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும்: வேடுவன் ஆகி, வேண்டு உருக்கொண்டு, காடு.அது தன்னில், கரந்த கள்ளமும்; மெய்க் காட்டிட்டு, வேண்டு உருக்கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்; ஒரியூரில் உகந்து, இனிது அருளிப் பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்; பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும்; (70) தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோஆர் கோலம் கொண்ட கொள்கையும்; தேன் அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும்; 1 16