பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் இடைமருது அதனில் ஈண்ட இருந்து, படிமப் பாதம் வைத்த அப்பரிசும்; எகம் பத்தில் இயல்பாய் இருந்து, பாகம் பெண்னோடு ஆயின பரிசும்; திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து, மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்; (80) சேவகன் ஆகி, திண்சிலை ஏந்தி, பாவகம் பலபல காட்டிய பரிசும்; கடம்பூர்தன்னில் இடம் பெற இருந்தும், ஈங்கோய் மலையில் எழில்அது காட்டியும்; ஐயாறு அதனில் சைவன் ஆகியும்; துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்; திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும்; டிகழுமலம்.அதனில் காட்சி கொடுத்தும்; கழுக்குன்று.அதனில் வழுக்காது இருந்தும், புறம்பியம் அதனில் அறம்பல அருளியும் . (90) --- - . r : .

  • - - - - - - - - - i. ". . . . o.o.

அந்தம் இல் பெருமை, அழல் உருக் கரந்து, சுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போல வந்தருளி, எவ்வெவர் தன்மையும் தன்வயின் படுத்து, தானே ஆகிய தயாபரன், எம்இறை of oil சந்திர தீபத்து, சாத்திரன் ஆகி, அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்; 118