பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும், அப்பரிசுஅதனால் ஆண்டு கொண்டருளி, நாயினேனை நலம் மலி தில்லையுள், கோலம் ஆர்தரு பொதுவினில், 'வருக என, எல, என்னை ஈங்கு ஒழித்தருளி, அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர், ஒன்ற ஒன்ற உடன் கலந்தருளியும் எய்த வந்திலாதார் எரியில் பாயவும், மால்அது ஆகி, மயக்கம் எய்தியும், பூதலம்.அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும், கால் விசைத்து ஒடிக் கடல்புக மண்டி, 'நாத நாத' என்று அழுது அரற்றி, பாதம் எய்தினர் பாதம் எய்தவும்; 'பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக என்று இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் எங்கவும்: எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம்நவில் கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு, அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நளன், இறைவன், ஈண்டிய அடியவ ரோடும், பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் ஒலிதரு கைலை உயர் கிழ வோனே. 122 (130) (140)