பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு.அண்டப் பகுதி அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன்; நாள் தொறும் o அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு (20) மதியில் தண்மை வைத்தோன்; திண்திறல் தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்; மேதகு காலின் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ் நீரில் இன் சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன்என்று என்று எனைப் பல கோடி, எனைப் பல பிறவும், அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன் அ.தான்று, முன்னோன் காண்க: முழுதோன் காண்க! (30) தன் நேர் இல்லோன்தானே காண்க! எனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க! கானப் புலி உரி அரையோன் காண்க! நீற்றோன் காண்க: நினைதொறும் நினைதொறும், ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்! இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க! அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க! பரமன் காண்க: பழையோன் காண்க! பிரமன், மால் கானாப்பெரியோன் காண்க! அற்புதன் காண்க: அநேகன் காண்க! (40)