பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருஅண்டப் பகுதி பரம ஆனந்தப் பழம் கடல்அதுவே கரு மா முகிலின் தோன்றித் திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய, (70) ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய, வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில்தோன்றி, வாள்.ஒளி மிளிர, எம்தம் பிறவியில் கோபம் மிகுத்து, முரசு எறிந்து, மாப்பொரும் கருணையின் முழங்கி, பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட, எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ள, செம்சுடர்வெள்ளம் திசைதிசை தெவிட்ட, வரை உறக் கேதக் குட்டம் கையற ஓங்கி, இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை, நீர்நசை தரவரும், நெடும்கண், மான் கணம் (80) தவப் பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும், அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன; ஆயிடை, வானப்பேர்யாற்று அகவயின் பாய்ந்து, எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்துச் சுழித்து எம்பந்தம் மாக்கரைபொருது, அலைத்து, இடித்து ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித்து, எழுந்து 136