பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு.அண்டப் பகுதி நிற்பன நிறீஇ, (110) சொல்பதம் கடந்த தொல்லோன்; - உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்; கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்; விண்முதல் பூதம் வெளிப்பூட வகுத்தோன்; பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து, அருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்; இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி! அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி! (120) ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி! ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்யப், போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்; மரகதக் குவாஅல், மாமணிப் பிறக்கம், மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழத், திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்; ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்; மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்; (30)