பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு.அண்டப் பகுதி 'இத்தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு, அத்தந்திரத்தில் அவ்வயின், ஒளித்தும், முனிவு அற நோக்கி நனவரக் கெளவி, ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து, வாள் நுதல் பெண்ணென ஒளித்தும்; சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய்த், துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்; ஒன்று, உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும் 'பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும் (140) ஒளிக்கும் சோரனைக் கண்டனம்; ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப்பிணையலில் தாள் தளை இடுமின்! சுற்றுமின் சூழ்மின் தொடர்மின்! விடேன்மின்! பற்றுமின்!” என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்; தன்நேர் இல்லோன் தானே ஆனதன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி, ஆட்கொண்டருளி, மறையோர் கோலம் காட்டி அருளலும்; உளையா அன்பு என்பு உருக ஒலம் இட்டு, (150) அலைகடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கித், தலைதடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறிப், பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து * நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும், 142