பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருஅண்டப் பகுதி கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றேன். ஆக, அவயவம் சுவைதரு கோல்தேன் கொண்டு செய்தனன்; ஏற்றார் மூதுர் எழில்நகை எரியின் விழ்வித்தாங்கு, அன்று, அருள் பெரும் தீயின் அடியோம் அடிக்குடில் (160) ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்; சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ! தரியேன் நாயேன்; தான்னனைச் செய்தது தெரியேன் ஆ! ஆ செத்தேன்; அடியேற்கு அருளியது அறியேன், பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்லகில்லேன்; செழும், தண் பாற்கடல்திரை புரைவித்து, உவாக்கடல் நள்ளும் நீர் உள்ளகம் ததும்ப, வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும் (170) தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன்-தழைக் குரம்பை தோறும் நாய்உடல் அகத்தே குரம்பை கொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள், --" ஏற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது உள்ளம் கொண்டு ஓர்உருச் செய்தாங்குஎனக்கு அள்ளுறு ஆக்கை, அமைத்தனன்; ஒள்ளிய கன்னல் கனிதேர் களிறுஎனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில் கருணை வான் தேன் கலக்க; அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றியோனே. (182) (* குரம்பையை இடமாகக் கொண்டு) 144