பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் யானை முதலா எறும்பு ஈறாய, ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும் மானிடப் பிறப்பினுள், மாதா உதரத்து, ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்; ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்; இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்; மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்; ஈர்.இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்; அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்; ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்; ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்; எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்; ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்; தக்க தசமதி தாயொடு தான்படும் துக்கசாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும்; காலை மலமொடு, கடும்பகல், பசி, நிசி வேலை, நித்திரை, யாத்திரை, பிழைத்தும்; கரும்சூழல், செவ்வாய், வெள்நகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கி, உள்மதர்த்து, கச்சு அறநிமிர்ந்து, கதிர்த்து, முன்பனைத்து, எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து, ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்; 156 (20) (30)