பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்; கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்; செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்; நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்; புல்வரம்பு ஆகிய பலதுறை பிழைத்தும்; தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி, முனிவு இலாதது ஒர்பொருள்.அது கருதலும் ஆறு கோடி மாயாசத்திகள் வேறு வேறு தம்மாயைகள் தொடங்கின; நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர்; சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக, வேதியரும் சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவது.ஆக அரற்றி, மலைந்தனர் மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாருதம் சுழித்து அடித்து, ஆஅர்த்து உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின், கலாபேதத்த கடுவிடம் எய்தி, அதில்பெரு மாயை எனைப் பலசூழவும், 158 (40) (50)