பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் சிறுமை என்று இகழாதே, திருவடிஇணையைப், பிறிவினை அறியா நிழல்அதுபோல, முன்பின் ஆகி, முனியாது, அத்திசை, என்பு நைந்து உருகி, நெக்குநெக்கு ஏங்கி, (80) அன்பு எனும் ஆறு கரைஅது புரள, நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக், கரமலர் மொட்டித்து இருதயம் மலரக், கண்களி கூர, நுண்துளி அரும்பச், சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி, வளர்த்தனை போற்றி! மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக், கைதரவல்ல கடவுள், போற்றி! ஆடக மதுரை அரசே, போற்றி! (90) கூடல் இலங்கு குருமணி, போற்றி! தென்தில்லை மன்றினுள் ஆடி, போற்றி! இன்று எனக்கு ஆர்.அமுது ஆனாய், போற்றி! முவா நான்மறை முதல்வா, போற்றி! சே ஆர் வெல்கொடிச் சிவனே போற்றி! மின் ஆர் உருவ விகிர்தா போற்றி! 162