பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் கல் நார் உரித்த கனியே, போற்றி! காவாய் கனகக் குன்றே , போற்றி! ஆ! ஆ! என்தனக்கு அருளாய், போற்றி! படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி! இடரைக் களையும் எந்தாய், போற்றி! ஈச போற்றி! இறைவ போற்றி! தேசப் பளிங்கின் திரளே, போற்றி! அரைசே, போற்றி! அமுதே, போற்றி! விரை சேர் சரண விகிர்தா, போற்றி! வேதி போற்றி! விமலா, போற்றி! ஆதி போற்றி அறிவே, போற்றி! கதியே, போற்றி! கனியே, போற்றி! நதிசேர் செம்சடை நம்பா, போற்றி! உடையாய், போற்றி! உணர்வே, போற்றி! கடையேன் அடிமை கண்டாய், போற்றி! ஐயா, போற்றி! அணுவே போற்றி! சைவா, போற்றி! தலைவா, போற்றி! 164 (100) (110)