பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் குறியே, போற்றி குணமே, போற்றி! நெறியே, போற்றி! நினைவே, போற்றி! வானோர்க்கு அரிய மருந்தே போற்றி! ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி! மூ ஏழ் சுற்றமும் முரண்உறு நரகிடை ஆழாமே அருள் அரசே, போற்றி! தோழா, போற்றி! துணைவா, போற்றி! வாழ்வே, போற்றி! என்வைப்பே போற்றி! முத்தா, போற்றி! முதல்வா, போற்றி! அத்தா, போற்றி! அரனே, போற்றி! உரை, உணர்வு, இறந்த ஒருவ போற்றி! விரிகடல் உலகின் விளைவே போற்றி! கருமுகில் ஆகிய கண்ணே, போற்றி! மன்னிய திருவருள் மலையே, போற்றி! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல், சென்னியில் வைத்த சேவக, போற்றி! தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி 166 (120) (130)