பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் பாகம் பெண்உரு ஆனாய், போற்றி! பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! மற்று ஒர்பற்று இங்கு அறியேன், போற்றி! குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்குஆர் பழனத்து அழகா, போற்றி! கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி! இத்தி தன்னின்கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே, போற்றி! தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! ஏனக்குருளைக்கு அருளினை, போற்றி! மானக் கயிலை மலையாய், போற்றி! அருளிட வேண்டும் அம்மான், போற்றி! இருள்கெட அருளும் இறைவா, போற்றி! தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி! களம் கொளக் கருத அருளாய், போற்றி 170 (160) (170)