பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் 'அஞ்சேல் என்று இங்கு அருளாய், போற்றி! நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி! அத்தா, போற்றி! ஐயா போற்றி! நித்தா, போற்றி! நிமலா போற்றி! பத்தா, போற்றி! பவனே, போற்றி! பெரியாய், போற்றி! பிரானே போற்றி! அரியாய், போற்றி! அமலா, போற்றி! மறையோர் கோல நெறியே, போற்றி! முறையோ? தரியேன்! முதல்வா போற்றி! உறவே போற்றி உயிரே, போற்றி! சிறவே போற்றி சிவமே, போற்றி! மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி! பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி! அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி! இலங்குசுடர் எம்ஈசா, போற்றி! கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி! குவைப்பதி மலிந்த கோவே, போற்றி! 172 (180)