பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் மலைநாடு உடைய மன்னே, போற்றி! கலைஆர் அரிகேசரியாய், போற்றி! திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி! பொருப்பு அமர் பூவணத்து, அரனே, போற்றி! அருவமும் உருவமும் ஆனாய், போற்றி! மருவிய கருணை ഥങ്ങഖധേ போற்றி! துரியமும் இறந்த சுடரே, போற்றி! தெரிவுஅரிது ஆகிய தெளிவே, போற்றி! தோளா முத்தச் சுடரே போற்றி! ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி! ஆராஅமுதே, அருளே, போற்றி! பேர் ஆயிரம் உடைப்பெம்மான், போற்றி! தாளி அறுகின் தாராய், போற்றி! நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி! சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி! சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி! மந்திர மாமலை மேயாய், போற்றி! எம்தமை உய்யக் கொள்வாய், போற்றி! புலிமுலை புல்வாய்க்கு அருளினை, போற்றி! 174 (190) (200)