பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் ജ്ഞഖങ്കL് ിഞ8 நடந்தாய், போற்றி! கரும் குருவிக்கு அன்று அருளினை, போற்றி! இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி! படி உறப் பயின்ற பாவக போற்றி! அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி! நரகொடு, சுவர்க்கம் நால்நிலம், புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி! ஒழிவு அறநிறைந்த ஒருவ, போற்றி! செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி! கழுநீர் மாலைக் கடவுள், போற்றி! தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி! பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி! புரம் பல எரித்த புராண, போற்றி! பரம்பரம் சோதிப் பரனே, போற்றி! போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்! போற்றி! போற்றி! புராணகாரண! போற்றி! போற்றி! சய, சய, போற்றி! 176 (210) . (225)