பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் (D விண்ணப்பப் படலம்) ஐந்தாவது திருச்சதகம் (பத்தி வைராக்கிய விசித்திரம்) (திருப்பெருந்துறை) 1. மெய்யுணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்துஉன் விரை ஆர் கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே. கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே . 190 (1) (2)