பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 1. மெய்யுணர்தல் உத்தமன் அத்தன் உடையான்அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால்இவன் என்ன மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊர் ஊர் திரிந்து எவரும் தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்றுகொல் சாவதுவே சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே . தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ஆம் சிவமே பெறும்திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம் பராபரமே 192 (3) (4) (5)