பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 1. மெய்யுணர்தல் பரந்துபல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர்உள்ளம் கரந்து நில்லாக்கள்வனே நின்தன் வார்கழற்கு அன்புஎனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள் செழுமலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதிஇலியாய் உழுவையின் தோல்உடுத்து உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும் இழிதரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்அடியேன் செய்த வில்வினையைக் கழிதரு காலமும் ஆய்அவை காத்து எம்மைக் காப்பவனே 194 (6) (7) (8)