பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 2. அறிவுறுத்தல் ஆம் ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு:உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்துஆடேன் சாம்ஆறே விரைகின்றேன் சதுராலே சார்வானே (14) வான்ஆகி மண் ஆகி வளிஆகி ஒளிஆகி ஊன் ஆகி உயிர்ஆகி உண்மையும்ஆய் இன்மையும்.ஆய்க் கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு வான்ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே (15) வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டிச் சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய்அடியேன் பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே (16) பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழன் மடவாள் கூறுஉடையாள் ஒருபாகம் விரவுவார் மெய்அன்பின் அடியார்கள் மேன்மேல்உன் அரவுவார் கழல்இணைகள் காண்பரோ அரியானே (7) 2O2