பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5:2. அறிவுறுத்தல் அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்துஎம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல்கீழ் விரைஆரந்த மலர்து வேன் வியந்துஅலறேன் நயந்துஉருகேன் தரியேன்நான் ஆம்ஆறுஎன் சாவேன்நான் சாவேனே (18) வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெள்நகைச் செவ்வாய்க்கரிய பாணல்.ஆர் கண்ணியர்க்கும் பதைத்துஉருகும் பாழ்நெஞ்சே ஊன்எல்லாம் நின்றுஉருகப் புகுந்துஆண்டான் இன்றுபோய் வான்உளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே (19) வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுஉனக்குச் சொல்கின்றேன் பல்காலும் விழ்கின்றாய் நீ அவலக்கடல் ஆய வெள்ளத்தே (20)