பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் ஐந்தாவது திருச்சதகம் 3. கட்டறுத்தல் (ஆசிரிய விருத்தம்) வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம்தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப் பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தான் நின்றுஉச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்ஆம் கண் இணையும் மரம்.ஆம் தீவினையினேற்கே (21) வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போது நான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுஉன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனையநான் பாடேன்நின்று ஆடேன் அந்தோ அலறிடேன். உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான் ஆனஆறு முடிவுஅறியேன் முதல் அந்தம் ஆயினானே. (22) 2O3