பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 3. சுட்டறுத்தல் ஆய நான் மறையவனும் நீயே ஆதல் அறிந்துயான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் நாதனே நான்உனக்குஒர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார்தாம் இல்லையே அன்றி மற்றுஒர் பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே எம்பெருமான் என்சொல்லிப் பேசுகேனே (23) பேசில் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றுஎன்றே பேசிப்பேசிப் பூசில் தான் திருநீறே நிறையப்பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்புஇறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவா.வெள்ளக் கள்வனேனை மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னைநீ ஆட்கொண்டே வண்ணம் தானே (24) வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று அனேகன் எகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்தும்ஆறு அறியாத எந்தாய் உன்தன் வண்ணம்தான் அதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்கள் அவை காட்டி வழி அற்றேனைத் திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே (25) 21 O