பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 3. சுட்டறுத்தல் சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன்.தன் கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்ககே ஆக்கி வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால்.அமுதப் பெரும்கடலே மலையே உன்னைத் தந்தனை செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டும்இலி இத்தனியனேற்கே (26) தனியேன் பெரும் பிறவிப் பெளவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான்சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யும்ஆறு ஒன்றுஎன்று எண்ணி அஞ்சு:எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27) கேட்டுஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசு இட்டு நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை மிட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே (28) 212