பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 4. ஆத்தும சுக்தி (ஆசிரிய விருத்தம்) ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்புஇலை என்பு உருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணைஇலி பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே அறிவுஇலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மேல் நெறிஎலாம் புலம்ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப்பானைப் பிறிவுஇலாத இன் அருள்கள் பெற்றிருந்தும்மாறு ஆடுதி பிணநெஞ்சே கிறிஎலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத் தாய் என்னைக் கெடுமாறே. 218 (31) (32)