பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 4. ஆத்தும சுத்தி புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்நகர் புகப்போதற்கு உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்குஅன்பு நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவது ஆவதும் இன்று.எனின் மற்று.இதற்கு என்செய்கேன் வினையேனே . (36) வினை என்போல் உடையார் பிறர்.ஆர் உடையான் அடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்றுமற்று அதனாலே முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்து நான் முட்டிலேன் தலை கீறேன் இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னது என்று அறியேனே (37) எனை யாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன்தேறலைச் சிவனை என் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடும் காலம் ஊனை யான் இருந்து ஒம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஒயாதே (38) 222