பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 6. அனுபோக சுத்தி (ஆசிரிய விருத்தம்) ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாசனே நான் யாதும்ஒன்று அல்லாப் பொல்லா நாய்ஆன நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொன் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்இலா மெய்யர் வெறிஆர் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டுஉடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர்ஏறே 236 (51) (52)