பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 6. அனுபோக சுத்தி போர் எறே நின் பொன்நகர்வாய் நீ போந்தருளி இருள் நீக்கி வார்ஏறு இளமென் முலையாளோடு உடன்வந்தருள அருள் பெற்ற சீர்ஏறு அடியார் நின்பாதம் சேரக் கண்டும் கண்கெட்ட ஊர்ஏறு ஆய்இங்கு உழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே (53) உலவாக் காலம் தவம்எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக்காண்பான் பல மாமுனிவர் நனிவாடப் பாவியேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பைஇது மாய்க்க மாட்டேன் மணியே உனைக் காண்பான் அலவா நிற்கும் அன்பு இலேன் என்கொண்டு எழுகேன் எம்மானே (54) மான்நேர் நோக்கி உண்மயாள் பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட ஊன்ஆர் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே (55) 238