பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 7. காருணியத்து இரங்கல் போற்றி என்போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி நின்பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றி நின்கருணை வெள்ளப் புதுமது புவனம் நீர்தி காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண்டு அருளு போற்றி விடஉளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடல்இது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந்து அருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி சங்கரா போற்றி மற்றுஒர் சரண் இலேன் போற்றி கோலப் பொங்குஅரா அல்குல் செவ்வாய் வெள்நகைக் கரிய வாள்கண் மங்கை ஒர்பங்க போற்றி மால்விடை ஊர்தி போற்றி இங்கு இவ்வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே (63) (64) (65)