பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.8 ஆனந்தத்து அழுந்தல் ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஒர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் மைகலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்கனே மெய்கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆக வேண்டுமே வேண்டும்நின் கழல்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டுகொண்டு நாயினேனை ஆவஎன்று அருளுநீ பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஒலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்றுஒர் உண்மை இன்மையின் வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொலோ நினைப்பதே 25Ց (73) (74) (75)