பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.9ஆனந்த பரவசம் அடியேன் அல்லேன்கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ஆரக் காணும்ஆறு காணேனே (83) காணும்ஆறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என்தன்னைப் படுத்தது என்னே பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர்.அமுதே அத்தா செத்தே போயினேன் என்நான் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே (84) மான்நேர் நோக்கி உமையாள் பங்கா மறைஈறு அறியா மறையோனே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிது என்கொடுமை பறைந்தேன் சிவ மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே (35) 268