பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 10. ஆனந்தாதீதம் (ஆசிரிய விருத்தம்) மாறு இலாத மாக்கருணை வெள்ளமே வந்து முந்தி நின்மலர் கொள்தான் இனை வேறு இலாப் பதப் பரிசுபெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன்மெய்ம்மை மேவினார் ஈறு இலாதநீ எளியைஆகி வந்து ஒளிசெய் மானிடம் ஆக நோக்கியும் கீறு இலாத நெஞ்சு உடையன் ஆயினேன் கடைய நாயினேன் பட்டகீழ்மையே (91) மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து எனைப் பணிகொண்டபின் மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன் மெய் இலங்கு வெண்ணிற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் பொய்யில் அங்குஎனைப் புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே (92) 276