பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.10. ஆனந்தாதீதம் பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன் போத என்றுஎனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர்க் கமலபாதனே அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்குஎனை இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே (93) இல்லை நின்கழற்கு அன்புஅது என்கனே ஏலம் ஏலும் நல்குழலி பங்கனே கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற்கு அன்பன் ஆக்கினாய் எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏதுகொண்டு நான்ஏதுசெய்யினும் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு இல்வானனே (94) வான நாடரும் அறிஒணாத நீ மறையில்ஈறும் முன்தொடர் ஒணாத நீ ஏனை நாடரும் தெரிஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே (95) 278