பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.10. ஆனந்தாதீதம் விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப்பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஒர் நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ங்னேஉடைய நாதனே (96) உடையநாதனே போற்றி நின்அலால் பற்று மற்றுஎனக்கு ஆவது ஒன்றுஇனி உடையனோபணி போற்றி உம்பரார் தம்பராபரா போற்றி யாரினும் கடையன் ஆயினேன் போற்றி என்பெரும் கருணையாளனே போற்றி என்னைநின் அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே (97) அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளுறு தேன் ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனைப்பருக நின்றது ஒர் துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே எனைவைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே (98) 280