பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண்மதிக்கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங் கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றச் செழும் சுடரே செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில்மொழியாரில் பல்நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறிவாய் அறுகால் உழுகின்ற பூ முடி உத்தர கோசமங் கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கு அரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே 294 (5) (6) Y