பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் பொய்யவனேனைப் பொருள்என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம்உண் மிடற்று மையவனே மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்றதார் விடை உத்தர கோசமங் கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலை யேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒரு தலைவா மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே பொருதலை மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே (7) (8) (9)