பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளரி ஒலி நின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கு அரசே வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே ஊறும் மட்டே மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஜம் ஐம்புலன்கள் கொண்டு விடும்தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ அடும்தகைவேல் வல்ல உத்தர கோசமங் கைக்கு அரசே கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங் கடே 298 (10) (11) (12)