பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே உன்னை ஒப்பாய் மன்னும் உத்தர சோமங் கைக்கு அரசே அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே (16) பொருளே தமியேன் புகல்இடமே நின்புகழ் இகழ்வார் வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் அருளே அணி பொழில் உத்தர கோசமங் கைக்கு அரசே இருளே வெளியே இகபரம் ஆகி இருந்தவனே (7) இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் அருந்தினனே மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப் பட்டு மடங்கினர்க்கே (18) 3O2