பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் மடங்க என் வல்வினைக் காட்டை நின் மன்அருள் தீக் கொளுவும் விடங்க என்தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர்நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே ஆனை வெம்போரில் குறுந்துாறு எனப்புலனால் அலைப்புண் டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து ஊனையும் என்பினையும் உருக் காநின்ற ஒண்மையனே 304 ( 1 9 ) (20) (21)