பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் ஒண்மையனே திருநீற்றை உத்துள்ளித்து ஒளி மிளிரும் வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிது.ஆம் பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் மற்று அடியேன்தன்னை தாங்குநர் இல்லை என் வாழ் முதலே உற்று அடியேன் மிகத் தேறி நின் றேன் எனக்கு உள்ளவனே உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளனலேலனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல்வேழத்து உரியாய் புலன் நின்கண் போதல் ஒட்டா மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே 306 (22) (23) (24)