பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் எறும்பிடை நாங்கூழ் எனப் புலனால் அரிப்புண்டு அலந்த வெறும் தமியேனை விடுதிகண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும்பதமே அடியார் பெயராத பெருமையனே பெருநீர் அறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன்கங்கை பொங்கி வரும் நீர்மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே கொழுமணி ஏர்நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய்ம் முழுதும் கம்பித்து அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து ஆட்கொண்டருளி என்னைக் கழுமணியே இன்னும்காட்டு கண்டாய் நின் புலன்கழலே ՀՇ, Հ (25) (26) (27)